ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் 28 ஆம் திகதி மாலைத்தீவுக்கு விஜயம் செய்த போது, அவர் பயணித்த அதே விமானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பயணித்ததாகவும் இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாமல் ராஜபக்ஷவிடம் தனது பிள்ளைகளுக்கு தொழிலை பெற்றுக்கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்தாக ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று உரையாற்றி அவர்,
கடந்தகால ஊழல் மோசடிகள் பற்றி பிரதமரிடம் கேள்வியெழுப்பினேன். அவர் வழங்கிய பதிலில் திருப்தியில்லை. கடந்தகால ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது.
தனது பிள்ளைக்கு தொழில் பெற்றுக்கொடுத்த நன்றிக்கடனை நாமல் ராஜபக்ஷவை விமானத்தில் சந்தித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
நாமலுடன் பேசிய விடயங்களை ஜனாதிபதியால் பகிரங்கப்படுத்த முடியுமா? ராஜபக்சக்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகிறது. ஜனாதிபதியின் போலியான வாக்குறுதிகள் மற்றும் மெருகூட்டப்பட்ட பேச்சுக்கு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என்றார்